மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி ! - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மஹிந்த ராஜபக்‌ஷ வைத்தியசாலையில் அனுமதி !

 



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (12) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிறிது நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை தொடர்பில் சில மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்‌ஷ தற்போது சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவரது உடல்நிலை தொடர்பான மேலதிக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் அவை குறித்த விபரங்கள் மேலும் தெரியவரும்.

About Lanka Theepam